spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி!

பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி!

-

- Advertisement -

 

Photo: Indian Premier League

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 47- வது லீக் போட்டி, நேற்று (மே 04) இரவு 07.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.

we-r-hiring

ஜெ., ஆட்சியில் கொண்டு வந்த நில அபகரிப்பு மசோதா அரசாணை ரத்து

முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக, கேப்டன் நிதிஷ் ராணா 42 ரன்களையும், ரிங்கு சிங் 46 ரன்களையும் எடுத்துள்ளனர்.

அதேபோல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில், புவனேஷ்வர் குமார், கார்த்திக் தியாகி, கேப்டன் மார்க்ரம், மார்கண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும், மார்கோ ஜான்சன், நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!

கொல்கத்தா அணி தரப்பில், வருண் சக்கரவர்த்தி, அனுகுள் ராய், ஆண்ட்ரே ரூசெல், ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும், வைபவ் அரோரா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.

புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ