பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் லீக் சுற்றுகள் இன்றுடன் முடிவடைகிறது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில் சென்னை அணி வெற்றி பெற்று லீக் சுற்றில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியானது கவுகாத்தியில் உள்ள பர்சபாரா மைதானத்தில் ராஜஸ்தான்VSகொல்கத்தா அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. தற்போது வரை நடைபெற்ற போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ள அணிகளாவன, கொல்கத்தா அணி 9 வெற்றியுடன் முதலிடத்தையும், ராஜஸ்தான் அணி 8 வெற்றியுடன் இரண்டாவது இடத்தையும், ஐதராபாத் அணி 7 வெற்றியுடன் 3வது இடத்தையும், பெங்களூரு அணி 7 வெற்றியுடன் 4வது இடத்தையும் பெற்றுள்ளன.
19 புள்ளிகளை பெற்றுள்ள கொல்கத்தா அணி நேரடியாக எலிமினேட்டருக்கு தகுதி பெற்றுள்ளது. மற்றொரு அணி எது என்பதை ஐதராபாத்VSபஞ்சாப் மற்றும் ராஜஸ்தான்VSகொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெறும் ஆட்டத்தை பொறுத்தே முடிவு தெரிய வரும். இந்த சீசனில் இறுதிப்போட்டியானது வருகிற மே 26ம் தேதி சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.