spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுத்ரில் வெற்றி பெற்ற லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது!

த்ரில் வெற்றி பெற்ற லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது!

-

- Advertisement -

 

த்ரில் வெற்றி பெற்ற லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது!
Photo: IPL official Twitter Page

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 68வது லீக் போட்டி, நேற்று (மே 20) இரவு 07.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

we-r-hiring

அவசரச் சட்டத்தின் மூலம் டெல்லி அரசின் அதிகாரம் பறிப்பு!

முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக பூரன் 58 ரன்களை எடுத்துள்ளார்.

கொல்கத்தா அணி தரப்பில் ஹர்ஷித் ராணா, சக்கரவர்த்தி தலா ஒரு விக்கெட்டையும், வைபவ் அரோரா, தாகூர், நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி!

அதைத் தொடர்ந்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 1 ரன் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

MUST READ