Homeசெய்திகள்விளையாட்டுமும்பை அணிக்கு 169 ரன்கள் இலக்காக நிரணயித்தது குஜராத் அணி!

மும்பை அணிக்கு 169 ரன்கள் இலக்காக நிரணயித்தது குஜராத் அணி!

-

மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் குஜராத் அணி முதல் பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. இதுவரை மூன்று லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியான, ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து குஜராத் அணி முதலாவது பேட்டிங்க் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹாவும் ,சுப்மான் கில்லும் களமிறங்கினர். சஹா 19 ரன்னும், கில் 31 ரன்களும் எடுத்தனர். அணியின் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 168 ரன்கள் சேர்த்தது. இதனைத்தொடர்ந்து மும்பை அணிக்கு 169 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா இஷான் கிஷான் களமிறங்கி விளையாடி வருகிறார்கள்.

 

MUST READ