Homeசெய்திகள்விளையாட்டுகுஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பவுலிங்!

குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பவுலிங்!

-

குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. இதுவரை மூன்று லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய நிலையில், சென்னை அணி வெற்றி பெற்றது. நேற்று இரண்டு லீக் போட்டிகள் நடந்தன. டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதேபோல் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மல்லுக்கட்டின. இப்போட்டியில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று மாலை நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான முதல் போட்டியில் ராஜஸ்தான் அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியான, ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹாவும், சுப்மான் கில்லும் விளையாடி வருகின்றனர்.

MUST READ