
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தியுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில், 2010, 2011, 2018, 2021 சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக 2023 கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது.
ஐந்தாவது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது சென்னை அணி!
குறிப்பாக, சென்னை அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி, தனது 250 வது போட்டியில் களமிறங்கினார். அதேபோல், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 300 வீரர்களை ஆட்டமிழக்க செய்த முதல் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் தோனி. டி20 போட்டிகளில் தோனிக்கு அடுத்தப்படியாக தினேஷ் கார்த்திக் 296 வீரர்களை அவுட் ஆக்கியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சுமார் 20 கோடி ரூபாய் பரிசு மற்றும் கோப்பையை வழங்கிப் பாராட்டினார் பி.சி.சி.ஐ.யின் செயலாளர் ஜெய் ஷா.அதைத் தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 12.5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
காங்கிரஸ் எம்.பி. பாலு தனோர்கர் காலமானார்!
16- வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை எடுத்ததற்காக குஜராத் டைட்டன்ஸ் அணி சுப்மன் கில்லுக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்பட்டது. நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 17 போட்டிகளில் விளையாடி, நான்கு அரைசதம், மூன்று சதம் என மொத்தம் 890 ரன்களை எடுத்துள்ளார்.
அதிக விக்கெட்டுகளை எடுத்ததற்காக குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் முகமது ஷமிக்கு ஊதா நிறத் தொப்பி வழங்கப்பட்டது. ஐ.பி.எல். தொடரில் 17 போட்டிகளில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.