

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலு தனோர்கர் (வயது 48) உடல்நலக்குறைவால் இன்று (மே 30) காலை காலமானார்.
“உடல்நிலையைப் பொறுத்தே அடுத்த சீசன் குறித்து முடிவு எடுப்பேன்”- தோனி பேட்டி!
சிறுநீரகத்தில் கல் இருந்ததால், நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். அதைத் தொடர்ந்து, உயர் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக, டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பாலு தனோர்கரின் மறைவுக்கு அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டனர் அரசியல் கட்சித் தலைவர்கள்.
ஐந்தாவது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது சென்னை அணி!
யார் இந்த பாலு தனோர்கர்?- விரிவாகப் பார்ப்போம்!
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாலு தனோர்கர், அரசியல் மீது கொண்ட ஆர்வத்தால், சிவசேனா கட்சியில் இணைந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த 2014- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அக்கட்சியின் சார்பில் வாரோரா பட்ராவாடி (Warora- Bhadrawati) தொகுதியில் போட்டியிட்டு, அபார வெற்றி பெற்று முதன்முறையாக சட்டப்பேரவைக்கு நுழைந்தார். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், கடந்த 2019- ஆம் ஆண்டு சந்திரபூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்களவைக்கு சென்றார்.