மக்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் அவை அலுவல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மக்களவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரம் கடும் கோஷங்களும் பரபரப்பும் மத்தியில் முன்னெடுக்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர் நடைமுறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களை உடனடியாக விவாதத்திற்குக் கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்திருந்த நிலையில் எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விதுவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமளி காரணமாக கேள்வி நேர செயல்பாடு பலமுறை தடைப்பட்டாலும், அவை அலுவல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.
அமளி தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சி உறுப்பினர்களை நோக்கி முக்கிய அறிவுரை வழங்கினார்.
மக்கள் உங்களை நாடாளுமன்றத்தில் விவாதம் செய்வதற்காகவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் ஈடுபடுவதற்காகவும் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறார்கள். நீங்கள் விவாதிக்க கோரும் விவகாரங்களை விவாதம் செய்லாம் தயாராக இருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளாா்.
அத்துடன், அனைத்து உறுப்பினர்களும் அமைதியை காக்கவும், அவரவர் இருக்கையில் அமரவும் அவர் அறிவுறுத்தினார். ஆனால், அமைதி நிலவாத சூழ்நிலையில், சபாநாயகர் அவை நடவடிக்கைகளை தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. இறுதியில், தொடர்ச்சியான குழப்பத்தினால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
சென்னைக்கு அருகில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… புயலாக மாறுமா? – இந்திய வானிலை ஆய்வு மையம்


