spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஎனது பிறந்த நாளுக்கு இது சிறந்த பரிசாக இருக்கும் - இந்திய அணிக்கு தோனி வாழ்த்து!

எனது பிறந்த நாளுக்கு இது சிறந்த பரிசாக இருக்கும் – இந்திய அணிக்கு தோனி வாழ்த்து!

-

- Advertisement -

டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

we-r-hiring

நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 76 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய அக்‌ஷர் பட்டேல் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்கள் எடுத்தது. பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 169 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்த நிலையில், டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், என் இதயத் துடிப்பு அதிகரித்தது. தன்னம்பிக்கை மற்றும் நிதானத்துடன் சிறப்பாக விளையாடினீர்கள். உலக கோப்பையை தாயகம் கொண்டு வரும் உங்களுக்கு அனைவரின் சார்பாகவும் பெரிய நன்றிகள். வாழ்த்துகள். எனது பிறந்த நாளுக்கு இது சிறந்த பரிசாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ