Homeசெய்திகள்விளையாட்டுமுத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா-மகளிர் கையுந்துப்பந்து (வாலிபால்) போட்டி

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா-மகளிர் கையுந்துப்பந்து (வாலிபால்) போட்டி

-

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடைபெற்ற  மகளிர் கையுந்துப்பந்து (வாலிபால்) போட்டி:போட்டியினை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கண்டு ரசித்த பார்வையாளர்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா-மகளிர் கையுந்துப்பந்து (வாலிபால்) போட்டிமதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவிலில் உள்ள அருள்மிகு சுந்தரராசா உயர்நிலைப் பள்ளியில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாநில அளவிலான மகளிர் ( கையுந்து பந்து ) வாலிபால் போட்டி நடைபெற்றது.இதில், 14 வயதுக்குட்பட்ட பிரிவில் 6 அணிகளும், மற்றும் மகளிர்களுக்கான பிரிவில் 5 அணிகள் என 11 அணிகள் பங்கேற்று போட்டியில் கலந்துக் கொண்டன.

இதனைத்தொடர்ந்து, 2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியினை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கண்டு ரசித்த நிலையில், 14 வயதுக்குட்பட்ட மகளிர் அணியில், முதல் பரிசை ஈரோட்டை சேர்ந்த எஸ்.டி. ஏ. டி பள்ளி மாணவிகளும், இரண்டாவது பரிசை சேலம் ஏ.என் மங்கலத்தைச் சேர்ந்த சென்மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகளும், மூன்றாம் பரிசை திண்டுக்கல் பிரான்சிஸ்சேவியர் பள்ளி மாணவிகளும், நான்காம் பரிசை அழகர்கோவில் அருள்மிகு சுந்தரராசா பள்ளி மாணவிகளும் பெற்றனர்.

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா-மகளிர் கையுந்துப்பந்து (வாலிபால்) போட்டி

அதேபோல் மகளிர்களுக்கான பிரிவில், எஸ்.ஆர்.எம் யுனிவர்சிட்டி அணியினர் முதல் பரிசையும், பி.கே.ஆர் ஈரோடு அணியினர் இரண்டாவது பரிசையும் பெற்றனர்.இதனைத்தொடர்ந்து, போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணியினருக்கு, ரொக்கப் பரிசு மற்றும் நினைவு கோப்பையும் வழங்கப்பட்டது.போட்டிக்கான ஏற்பாடுகளை, அழகர்கோவில் ஶ்ரீ கள்ளழகர் திருக்கோவில் சார்பில், அறங்காவல்குழு தலைவர் வெங்கடாசலம் மற்றும் திருக்கோவில் செயல் அலுவலர் ராமசாமி உள்ளிட்ட திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

MUST READ