spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டு99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய நியூசிலாந்து அணி!

99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய நியூசிலாந்து அணி!

-

- Advertisement -

 

99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய நியூசிலாந்து அணி!
Photo: ICC

99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

we-r-hiring

“உயிர்த் தேவைக்கு அவசியமானது காவிரி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 322 ரன்களை எடுத்தது.

நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக, வில் யங் 70 ரன்களையும், ரச்சின் ரவீந்த்ரா 51 ரன்களையும், டாம் லாதம் 53 ரன்களையும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய நெதர்லாந்து அணி சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. எனினும், காலின் அக்கர்மான் 69 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்களை மட்டுமே எடுத்தனர். இதனால் நியூசிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் பணம், கிலோ கணக்கில் தங்கம், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்?

நடப்பு உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று, நியூசிலாந்து அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ