
தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் திறந்து விடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
“பா.ஜ.க.வை அ.தி.மு.க. பாதுகாக்கிறது”- அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
இதனை மேற்கோள்காட்டி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைக்கான மட்டுமல்ல – மனித உயிர்களின் உயிர்த் தேவைக்கு அவசியமானது காவிரி நீர்! அதனைத் தமிழ்நாட்டு மக்களுக்குப் பெற்றுத் தருவதில் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வாதிட்டுப் பெற்றுத் தருவோம்.
“கூட்டணிக்காக தி.மு.க. நாடகமாடுகிறது”- அண்ணாமலை குற்றச்சாட்டு!
ஒன்றிய அரசானது, இதில் முறையாகச் செயல்பட்டுத் தமிழ்நாட்டு மக்களுக்கு காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டும். இதற்கான அனைத்துவித முயற்சிகளையும் தி.மு.க. அரசு தொடர்ந்து உறுதியாக எடுக்கும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.