பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சிந்து அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நேற்று முன் தினம் கோலாகலமாக தொடங்கியது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
பாரிஸ் ஒலிம்பிக்கின் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தனது முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெற்றி பெற்றுள்ளார். இன்று நடைபெற்ற குரூப் ஸ்டேஜில் அவர் மாலத்தீவைச் சேர்ந்த வீராங்கனை பாத்திமாவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே அசத்தலாக விளையாடிய அவர். 21-9. 21-6 என்ற நேர் செட் கணக்கில் பாத்திமாவை வீழ்த்தியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவர் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.