Homeசெய்திகள்விளையாட்டுஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டி - இந்தியாவின் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்

ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டி – இந்தியாவின் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்

-

- Advertisement -

பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

2024 பாரீஸ் ஒலிம்பிக் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். ஸ்வப்னில் குசாலே Kneeling, prone, standing என 3 பிரிவுகளையும் சேர்த்து 590 புள்ளிகள் பெற்று பதக்கத்தை தட்டிச் சென்றார். ஏற்கனவே, பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் இந்தியா 2 பதக்கங்களை வென்ற நிலையில், தற்போது மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

இதனிடையே ரயில்வே ஊழியரான ஸ்வப்னில் குசாலே தனது கடின முயற்சியால் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளது அனைவரது பாராட்டுதலையும் பெற்றுள்ளது. மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வப்னில் குசலே, கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய ரயில்வேயின் புனே பிரிவில் டிக்கெட் கிளார்க்காக பணியில் சேர்ந்தார்.

கடந்த 2023 இல் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், 2022 இல் பாகுவில் நடந்த உலகக் கோப்பையிலும் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில்
தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த 2021ல் புது தில்லி மற்றும் 2015 முதல் 2023 வரை நடைபெற்ற பல்வேறு துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பங்கேற்று வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.

இந்த நிலையில், நடப்பு பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் வெண்கலப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார. அவரது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு ரயில்வே துறை பாராட்டு தெரிவித்துள்ளது.

MUST READ