spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஒலிம்பிக் மல்யுத்தம் - இந்திய வீரர் அமன் ஷெராவத் காலிறுதிக்கு தகுதி

ஒலிம்பிக் மல்யுத்தம் – இந்திய வீரர் அமன் ஷெராவத் காலிறுதிக்கு தகுதி

-

- Advertisement -

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ பிரீஸ்டைல் பிரிவு தொடக்க ஆட்டத்தில் இந்திய வீரர் அமன் ஷெராவத், முன்னாள் ஐரோப்பிய சாம்பியனான வடக்கு மாசிடோனியாவின் விளாடிமிர் எகோரோவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமன் 10-0 என்ற கணக்கில் விளாடிமிர் எகோரோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் அவர் முன்னாள் உலக சாம்பியன் ஜெலிம்கான் அபகாரோவ் உடன் மோதுகிறார்.

we-r-hiring

இதனிடையே, மகிளர் மல்யுத்தப் பிரிவில் இந்தியாவின் அன்ஷு மாலிக், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான ஹெலன் மாரோலிஸ் உடன் மோதினார்.
இந்த போட்டியில் 2-7 என்ற கணக்கில் அன்ஷு மாலிக் தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறினார்

 

 

MUST READ