ஒலிம்பிக் மல்யுத்தம் 76 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ரீத்திகா காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
33-வது ஒலிம்பிக் போட்டித் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் மல்யுத்தம் 76 கிலோ எடைப்பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் இந்தியாவின் ரீத்திகா, 2 முறை ஐரோப்பிய சாம்பியனான ஹங்கேரி வீராங்கனை பெர்னாடெட் உடன் மோதினார்.
இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரீத்திகா 12-2 என்ற புள்ளி கணக்கில் ஹங்கேரி வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மாலை நடைபெறும் காலிறுதிப் போட்டியில் அவர் 2 முறை உலக சாம்பியனான அய்பெரி கைஜி உடன் மோதுகிறார்.