Homeசெய்திகள்விளையாட்டுஒலிம்பிக் மல்யுத்தம் - இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் வினேஷ் போகத்!

ஒலிம்பிக் மல்யுத்தம் – இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் வினேஷ் போகத்!

-

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரீஸ்டைல் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யுஸ்னெய்லிஸ் கஸ்மன் லோபஸ் உடன் மோதினார். பரபரபபான இந்த போட்டியில் வினேஷ் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

முன்னதாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனையும், ஒலிம்பிக்கில் நடப்பு சாம்பியனுமான யூயி சுசாகியையும், காலிறுதியில் முன்னாள் சாம்பியனான உக்ரைனின் ஓக்சனா லிவாச்சையும் வென்று முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.

தற்போது வினேஷ் போகத் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி உறுதியாகியுள்ளது.

MUST READ