spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுபாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்

-

- Advertisement -

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இரண்டாவது பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

we-r-hiring

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கடந்த 26-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஒலிம்பிக் தொடங்கிய 3வது நாளில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்று இந்தியாவின் முதல் பதக்க கணக்கை தொடங்கி வைத்தார். .

இந்நிலையில் இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியா, தென் கொரியா மோதின. இதில் இந்தியாவின் மனு பார்க்கர். சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது. 10 மீ. மகளிர் ஒற்றையர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பார்க்கர் அண்மையில் வெண்கலம் வென்றிருந்த நிலையில் தற்போது சரப்ஜோத் சிங்குடன் ஜோடியாக இணைந்து இரண்டாவதாக வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

 

 

 

 

MUST READ