spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுபாரீஸ் ஒலிம்பிக் - வினேஷ் போகத் திடீர் தகுதி நீக்கம்... பதக்க வாய்ப்பை இழந்தார்!

பாரீஸ் ஒலிம்பிக் – வினேஷ் போகத் திடீர் தகுதி நீக்கம்… பதக்க வாய்ப்பை இழந்தார்!

-

- Advertisement -

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் 50 கிலோ ஃப்ரீஸ்டைல் அரையிறுதியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யுஸ்னெலிஸை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். வினேஷ் போகத் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

we-r-hiring

இந்த நிலையில், வினேஷ் போகத் கூடுதல் எடை காரணமாக ஒலிம்பிக் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு வினேஷ் போகத்தின் எடையை பரிசோதித்தபோது அவர் 2 கிலோ கூடுதலாக இருப்பது தெரியவந்தது. இரவு முழுவதும் வினேஷ் போகத் ஸ்கிப்பிங், சைக்கிளிங் உள்ளிட்ட உடற்பயிற்சி மேற்கொண்டு 1.9 கிலோ எடை வரை குறைத்துள்ளார்.

எனினும் 100 கிராம் எடை கூடுதலாக உள்ளதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன் காரணமாக அவருக்கு வெள்ளிப்பதக்கமும் கிடைக்காது. பத்தகம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட வினேஷ் தகுதி தகுதி நீக்கம் செய்யப்பட்டது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

 

MUST READ