Homeசெய்திகள்விளையாட்டுராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் - ரசிகர்கள் அதிர்ச்சி!

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

-

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடரில் நேற்று 24வது லீக் போட்டி நடைபெற்றது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற இப்போட்டியில் 24வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மான் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. அந்த அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 196 ரன்கள் குவித்தது.

பின்னர் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன் 35 ரன்னிலும் சுப்மான் கில் 72 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மேத்யூ வேட் 4 ரன்னிலும் அபினவ் மனோகர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர், இறுதியில் அதிரடியாக விளையாடிய ராகுல் திவேதியா 11 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இறுதி ஓவரில் அணிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட போது ரஷித் கான் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். ரஷித் கான் 11 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். அணியின் ஆட்டநாயகன் விருது ரஷித் கானுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி மெதுவாக பந்துவீசியதாக நடுவர்கள் புகார் அளித்து இருந்தனர். இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

MUST READ