மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
சூதுகவ்வும் 2 படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்
ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய மும்பையில் இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை எடுத்தது. மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 65, நபி 23, நேஹல் வதேரா 49 ரன்களை எடுத்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை எடுத்தனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
2026 இல் என்னை அரசியலுக்கு வர வைக்காதீங்க……. நடிகர் விஷால் பேச்சு!
ராஜஸ்தான் அணி தரப்பில் ஜெய்ஷ்வால் அதிரடியாக விளையாடி 104 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.