Homeசெய்திகள்விளையாட்டுசூறாவளியாய் சுழன்று அடித்த சாம்சன்... லக்னோ அணிக்கு 194 ரன்கள் இலக்கு!

சூறாவளியாய் சுழன்று அடித்த சாம்சன்… லக்னோ அணிக்கு 194 ரன்கள் இலக்கு!

-

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 193 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. இதுவரை மூன்று லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் தொடங்கிய 4வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் யாஷ்வி ஜெய்ஷ்வால் ஆகியோர் களமிறங்கினர். பட்லர் 11 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 24 ரன்களிலும் வெளியேறிய நிலையில், அடுத்த வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் ரியான் பராக்குடன் சிறப்பான கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன் 82 ரன்கள் எடுத்தார். ரியான் பராக் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது.

MUST READ