Homeசெய்திகள்விளையாட்டுஇரண்டாவது வெற்றியை பெறப்போவது யார்? - பெங்களூருvsகொல்கத்தா அணிகள் இன்று மோதல்!

இரண்டாவது வெற்றியை பெறப்போவது யார்? – பெங்களூருvsகொல்கத்தா அணிகள் இன்று மோதல்!

-

- Advertisement -

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில், இன்று நடைபெறவுள்ள 10வது லீக் போட்டியில் பெங்களூருvsகொல்கத்தா அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில், இன்று நடைபெறவுள்ள 10வது லீக் போட்டியில் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஸ்ரேயர்ஸ் ஐய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது இன்று 7.30 மணிக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. பெங்களூரு அணியானது தனது தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னை அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அடுத்ததாவது நடைபெற்ற இரண்டாவது போட்டியில், பஞ்சாப் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் விழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இவ்விரு அணிகளும் இதுவரை 32 போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணியானது 18 முறையும், பெங்களூரு அணியானது 14 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த போட்டியை பொறுத்தவரையில் பெங்களூரு அணியானது தனது இரண்டாவது வெற்றியை பெற போராடும். அதே சமயம் கொல்கத்தா அணியும் தனது இரண்டாவது வெற்றியை பெற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்பு பஞ்சம் இருக்காது.

MUST READ