Homeசெய்திகள்விளையாட்டுராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

-

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி முதலாவது பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் முதலாவது தகுதி சுற்று நேற்றிரவு நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இன்று எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பெங்களூருvsராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியானது அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பெங்களூரு அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி 33 ரன்களிலும் பாப் டூ பிளசிஸ் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 27 ரன்களிலும் ரஜத் படிதார் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 172 ரன்கள் எடுத்தது. பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடவுள்ளது.

 

MUST READ