Homeசெய்திகள்விளையாட்டுபெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

-

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் முதலாவது தகுதி சுற்று நேற்றிரவு நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இன்று எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பெங்களூருvsராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டியானது அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 நடைபெறுகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பெங்களூரு அணி 15 முறையும் ராஜஸ்தான் அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டங்கள் முடிவில்லாமல் போனது. இந்த சீசனில் கடந்த 19வது லீக் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பெங்களூரு அணி அதற்கு பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பெங்களூரு அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலியும் பாப் டூ பிளசிஸ்சும் களமிறங்கவுள்ளனர்.

 

MUST READ