Homeசெய்திகள்விளையாட்டுசச்சின் டெண்டுல்கரின் சிலை இன்று திறப்பு!

சச்சின் டெண்டுல்கரின் சிலை இன்று திறப்பு!

-

- Advertisement -

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவ.01) சிலை திறக்கப்படவுள்ளது.

வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு!

சச்சின் டெண்டுல்கர் இந்தாண்டு ஏப்ரலில் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது 50 ஆண்டு கால வாழ்க்கைக்கு அர்ப்பணிக்கும் வகையில், வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் சச்சினின் முழு உருவச்சிலைத் திறக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைதானத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கர் ஸ்டேண்டுக்கு அருகிலேயே, அவருக்கு பிடித்தமான ஸ்டைலில் ஷாட் அடிக்கும் வகையில், சிலை நிறுவப்பட்டுள்ளது.

‘தாய்லாந்துக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை’ என அறிவிப்பு!

இன்று (நவ.01) நடைபெறும் சிலை திறப்பு விழாவில், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

MUST READ