
19 கிலோ எடைக் கொண்ட வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 101 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 101 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 19 கிலோ எடைக் கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
‘தாய்லாந்துக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை’ என அறிவிப்பு!
கடந்த மாதம் வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 203 ரூபாய் உயர்த்தப்பட்டு, 1,898 ரூபாயாக இருந்த நிலையில், இந்த மாதமும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று, 14.2 கிலோ எடைக் கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றமின்றி 918 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.