ஒரே நாளில் சச்சின் டெண்டுல்கரின் இரண்டு உலக சாதனைகளை சச்சின் மண்ணில் முறியடித்துள்ளார் விராட் கோலி.
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொண்டது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இந்திய அணியின் விராட் கோலி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுகரின் சாதனையை முறியடித்தார்.
ஒரு உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்தார். 2023 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 673 ரன்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளார். கடந்த 2003 – ஆம் ஆண்டு உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் சச்சின் டெண்டுல்கர் 673 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.
ஒருநாள் போட்டியில் சச்சின் (49) சதங்கள் அடித்த சாதனையை விராட் கோலி 50ஆவது சதமடித்து முறியடித்துள்ளார். 279 ஒருநாள் இன்னிங்ஸில் விளையாடியுள்ள விராட் கோலி தனது 50-வது சதத்தை நிறைவுச் செய்தார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், 106 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் விராட் கோலி சதமடித்துள்ளார்.