spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சு

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சு

-

- Advertisement -

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

we-r-hiring

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இலங்கைக்கு சென்றுள்ளது. இதில் இந்திய அணியானது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலும் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலமையிலும் களம் காண்கின்றன. இதில் முதலாவது டி20 போட்டியானது பல்லகெலேவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி டி20 போட்டிகளில் ஆடும் முதலாவது ஆட்டம் இதுவாகும். இதனால் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து இந்திய அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது.

MUST READ