
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இலங்கைக்கு எதிரான போட்டியில், மூன்று தென்னாபிரிக்க அணியின் வீரர்கள், சதமடித்து சாதனை படைத்துள்ளனர். மேலும் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை தென்னாப்பிரிக்கா அணியும், அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையை மார்க்ரம் படைத்துள்ளனர்.

பட்டாசு கடை தீ விபத்து- பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!
முதலில் பேட்டிங் தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரரான கேப்டன் பவுமா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து ஜோடி சேர்ந்த குயிண்டன் டி காக், வேண் டர் டுசன் ஆகியோர் சிறப்பாக விளையாடி அசத்தினர். அதிரடியாக விளையாடிய குயிண்டன் டி காக் 74 பந்துகளில் சதமடித்திருந்த போது, 16வது பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சதமடித்த வேண் டர் டுசன் ரன்களில் பெவிலியில் திரும்பினார். ஆனால் அடுத்த வந்த மார்க்ரம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இலஙகை அணி வீரர்களின் பந்து வீச்சை நாளாப்புறமும் சிதறடித்த அவர், 49 பந்துகளை எதிர்கொண்டு சதம் விளாசினார்.
அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
உலகக்கோப்பைத் தொடரில் ஒரே ஆட்டத்தில் ஒரே அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் சதமடித்து சாதனைப் படைத்துள்ளனர்.