
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. ஹைதராபாத் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்காக இவ்விரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கிரிக்கெட் வீரர் நடராஜன் பிறந்தநாள்- சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் அஜித்குமார்!
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இரு அணிகளும் 3 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2- ல் வெற்றி பெற்றுள்ளது. சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, இன்றைய போட்டி இந்த இரு அணிகளுக்கும் புள்ளிகள் பட்டியலில் முன்னேற முக்கியமானதாக கருதப்படுவதால் போட்டியின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானின்றி களமிறங்குகிறது. அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் அல்லது பத்ரிநாத் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பிலும் பந்துவீச்சில் மாற்றம் இருக்கக் கூடும் என கருதப்படுகிறது.