
ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நாளை (செப்.10) மோதுகின்றன. காயத்தில் இருந்து மீண்ட ராகுல், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பிய பும்ரா தற்போது அணியுடன் இணைந்திருப்பது கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.
பட்டாபிராம் சி.டி.எச். சாலை : அதிகாரிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு
ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் குரூப் ஆட்டங்கள் நிறைவுப் பெற்ற நிலையில், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிப் பெற்றனர். இந்த நிலையில், சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.
முன்னதாக, குரூப் சுற்றில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம், மழைக் காரணமாக ரத்துச் செய்யப்பட்டது. அந்த போட்டியில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் ஷாகின் அஃப்ரிடி உள்பட மூன்று வீரர்கள் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களை தங்களது வேகத்தால் திணறடித்தனர்.
எனினும், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் ஆகியோரின் அரை சதங்கள், இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஏறக்குறைய இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். எனவே அந்த அணி வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆவடியில் திடீரென்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்
கொழும்பு பிரேமதாச மைதானத்தில் மதியம் 03.00 மணிக்கு போட்டி தொடங்குகிறது . மழையின் இடையூறு இருந்தாலும் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டிருப்பதால், போட்டியை மிகுந்த ஆவலோடு ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.