spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுடி20 உலக கோப்பை - இந்தியாVSவங்காளதேசம் அணிகள் இன்று மோதல்!

டி20 உலக கோப்பை – இந்தியாVSவங்காளதேசம் அணிகள் இன்று மோதல்!

-

- Advertisement -

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ”சூப்பர் 8” சுற்று இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாvsவங்காளதேசம் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

we-r-hiring

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோத உள்ளன. இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள்‘சூப்பர் 8’ சுற்றில் பலப்பரீட்சை நடத்த வேண்டும். அதன் பிறகு ஜூன் 24ம் தேதி அரையிறுதி ஆட்டங்களும், ஜூன் 29ம் தேதி பிரிட்ஜ்டவுனில் பைனலும் நடக்க உள்ளன. இந்த தொடரில் லீக் ஆட்டமானது கடந்த 18-ந் தேதி முடிவடைந்தது.

இந்நிலையில் இன்று நடைபெறும் ’சூப்பர் 8’ சுற்றில் 47வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும் வங்காளதேசம் அணியானது நஜ்மூல் ஹசன் சாண்டோ தலைமையிலும் களம் காண்கின்றன. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீஸ் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்குகிறது. ”சூப்பர் 8” சுற்றில் இரண்டாவது ஆட்டத்தில் இரு அணிகளும் மோதும் இந்தாட்டமானது விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

MUST READ