
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

‘கண்ணகி’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்… மகிழ்ச்சியில் படக்குழுவினர்!
முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கீட்டது. மழை குறுக்கீட்டால் டக்வொர்த் லீவிஸ் முறையில் தென்னாப்பிரிக்காவிற்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 13.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துச் சென்றது. தென்னாப்பிரிக்கா அணியின் ஹெண்ட்ரிக்ஸ் 49 ரன்களையும், மார்க்ரம் 30 ரன்களையும், டேவிட் மில்லர் 17 ரன்களையும் எடுத்தனர்.
இந்திய அணியில் ரிங்கு சிங் 68 ரன்களையும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 56 ரன்களையும், திலக் வர்மா 29 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில், முகேஷ் குமார் 2, குல்தீப் யாதவ் மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ பட ஃபர்ஸ்ட் சிங்கள் ரிலீஸ் அப்டேட்!
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டிமழையால் ரத்தான நிலையில், தென்னாப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.


