இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
‘காவிரி விவகாரம்’: மத்திய அமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!
புரொவிடென்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக, திலக் வர்மா 51 ரன்களையும், இஷான் கிஷன் 27 ரன்களையும் எடுத்துள்ளனர்.
பின்னர் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 18.5 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணி தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 67 ரன்களையும், ஷிம்ரன் ஹெட்மயர் 22 ரன்களையும், ரோவ்மென் பவெல் 21 ரன்களையும் எடுத்துள்ளனர்.
இந்திய அணி தரப்பில், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட்டையும், சாஹல் 2 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.
‘பாரதியார் மண்டபம்’ ஆன தர்பார் ஹால்!
ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.