இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான கடைசி மகளிர் டி20 போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தொடரையும் கைப்பற்றியது.
போக்குவரத்து துறையின் சீரழிவுக்கு திராவிட கட்சிகளின் ஆட்சியே காரணம் – சீமான் குற்றச்சாட்டு
மூன்று போட்டிகள் கொண்ட மகளிர் டி20 தொடரில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிகள் விளையாடின. முதல் இரண்டு போட்டிகளில் இவ்விரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றிருந்த நிலையில், தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி, நவி மும்பை மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய மகளிர் அணி, தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தனர்.
148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடியது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று டி20 போட்டிகளைக் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய மகளிரணி கைப்பற்றியது.
அரசுத் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ராஜினாமா!
ஏற்கனவே ஒருநாள் தொடரையும் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கைப்பற்றியிருந்தது. எனினும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்று சாதனையைப் புடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.