Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

-

இந்தியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 16ஆம் தேதி பெங்களூரில் தொடங்குகிறது.  இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியில், கேன் வில்லியம்சன், டிம் சவுத்தி, விக்கெட் கீப்பர் பிளண்டல், டெவான் கான்வே, மேட் ஹென்றி, டேரில் மிட்ஷல், கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா,  மிட்சல் சாட்னர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இளம் வீரர் மார்க் சேப்மேன் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.

நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சனுக்கு தசைபிடிப்பு பிரச்சினை காரணமாக, அவர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்றும், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சுழற்பந்து வீச்சாளர் மைக்கேல் பிரேஸ்வெல் முதல் டெஸ்டில் மட்டுமே ஆடுவார் என்றும்,  கடைசி 2 டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக இஷ் சோதி விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ