பாரீசில் நடைபெற்று வந்த 33-வது ஒலிம்பிக்கில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் நிறைவடைந்தது.

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் கடந்த ஜூலை 26ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. பாரீஸ் ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றனர். இந்த நிலையில் ஒலிம்பிக்கில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் நிறைவடைந்துள்ளன. இதில் பதக்கப்பட்டியலில்40 தங்கம் உள்பட 126 பதக்கங்களை பெற்று அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.

சீனா 40 தங்கப்பதக்கம் உள்ளிட்ட 91 பதக்கங்களுடன் 2ஆம் இடம் பிடித்துள்ளது. ஜப்பான் 20 தங்கம் உள்ளிட்ட 45 பதக்கங்களுடன் 3வது இடத்தையும் 18 தங்கம் உள்பட 53 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 4வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலப்பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் 71வது இடத்தில் உள்ளது. இந்திய நேரப்படி இன்று நள்ளிரவில் நிறைவு விழா நடைபெறுகிறது. இதில் ஹாக்கி வீரர் ஶ்ரீஜேஷ் – மனு பாக்கர் ஆகியோர் தேசிய கொடியை ஏந்திச் செல்கின்றனர்.