Homeசெய்திகள்விளையாட்டுஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா? - இன்று இரவு அனல் பறக்கும் ஆட்டம்!

ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா? – இன்று இரவு அனல் பறக்கும் ஆட்டம்!

-

- Advertisement -

 

டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்து தற்போது சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகிறது. சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. இதேபோல் சூப்பர் 8 சுற்றில் குரூப் பி பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. குருப் ஏ பிரிவில் இந்தியா அணி மட்டுமே அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்துள்ள நிலையில், மற்றொரு அணி எது என்பது தெரியவில்லை.

இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி மேற்கிந்திய தீவுகளில் உள்ள டேரன் சம்மி மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணி எளிதில் அரையிறுதி சுற்றுக்கு சென்றுவிடும். ஒருவேளை தோல்வி அடைந்தால் ஆப்கானிஸ்தான் – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முடிவை பொறுத்த ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி வாய்ப்பு முடிவு செய்யப்படும். ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருப்பினும் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க காத்திருக்கும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்த எந்த எல்லைக்கும் செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

MUST READ