ஐபிஎல் போட்டியில் 5000 ரன்களை கடந்த ஏழாவது வீரர் என்ற சிறப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பெற்றார்.
16வது ஐபிஎல் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆறாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதின.
இதில் சென்னை அணி முதலில் பேட் செய்தது. அப்போது ஆட்டத்தின் கடைசி ஓவரில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதல் இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்க விட்டார்.
இதன் மூலம் ஐபிஎல் போட்டியில் தனது 5000 ரன்களை கடந்தார். 236வது போட்டியில் களம் இறங்கிய தோனி 24 அரை சதங்கள் உடன் இந்த இலக்கை எட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் ஐபிஎல் போட்டியில் 5000 ரன்களைக் கடந்த ஏழாவது வீரர் என்ற சிறப்பையும் சென்னை அணியின் இரண்டாவது வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.
ஏற்கனவே சுரேஷ் ரெய்னா சென்னை அணி சார்பில் 5000 ரன்களை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.