Homeசெய்திகள்விளையாட்டு"நான் தோற்றுவிட்டேன்... மல்யுத்தம் வென்று விட்டது" ஓய்வை அறிவித்த வினேஷ் போகத் - நாடே அதிர்ச்சி

“நான் தோற்றுவிட்டேன்… மல்யுத்தம் வென்று விட்டது” ஓய்வை அறிவித்த வினேஷ் போகத் – நாடே அதிர்ச்சி

-

"நான் தோற்றுவிட்டேன்... மல்யுத்தம் வென்று விட்டது" ஓய்வை அறிவித்த வினேஷ் போகத் - நாடே அதிர்ச்சி”அம்மா நான் தோற்றுவிட்டேன்… மல்யுத்தம் வென்று விட்டது”  என ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்.

ஒலிம்பிக்கில் மல்யுத்தம் இறுதிப்போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும்அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியது.

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கூறி இறுதிப்போட்டிக்கு முன்பு அவரை தகுதிநீக்கம் செய்வதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்ததை அடுத்து அவர் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

இந்த நிலையில், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்துள்ளார்.தன்னிடம் போராட சக்தி இல்லை என அவர் கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நாக சைதன்யாவிற்கும் பிரபல நடிகைக்கும் இன்று நிச்சயதார்த்தம்…. ஆனா இதுல ஒரு ட்விஸ்ட்!

வினேஷ் போகத் அதிரடி ஓய்வு பெறுவதாக அறிவித்து இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “அம்மா, நான் தோற்றுவிட்டேன்.. மல்யுத்தம் வென்று விட்டது… என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் கனவு, என் தைரியம் அனைத்தும் உடைந்துவிட்டன, இனி என்னிடம் போராட சக்தி இல்லை.. குட்பை மல்யுத்தம் 2001-2024 … உங்கள் அனைவருக்கும் நான் என்றும் கடமைப்பட்டிருப்பேன். என்னிடம் போராட வலிமை இல்லை,மன்னிக்கவும்.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

MUST READ