உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் வரும் நவம்பர் 20- ஆம் தேதி முதல் டிசம்பர் 15- ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணி சாதனை வெற்றி!
நடப்பாண்டிற்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச் சுற்றுக்கு தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் தேர்வாகியுள்ளார். அவர் சீனாவின் டிங் லிரெனை எதிர்கொள்கிறார். இந்த நிலையில், உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் வரும் நவம்பர் 20- ஆம் தேதி முதல் டிசம்பர் 15- ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளே ஆப் வாய்ப்பை உறுதிச் செய்தது ராஜஸ்தான் அணி!
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை நடத்த விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என சர்வதேச செஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது. உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை நடத்த குறைந்தபட்சத் தொகையாக ரூபாய் 68 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கு குகேஷ் தேர்வாகியுள்ளதால் தமிழகத்தில் இறுதிப் போட்டியை நடத்த வேண்டும் என அவரது பயிற்சியாளர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.