
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அக்., 26-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் சந்திரமுகி 2
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 19வது போட்டி, லக்னோவில் உள்ள பாரத் ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக்.21) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய நெதர்லாந்து அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 262 ரன்களை மட்டுமே எடுத்தது.
பின்னர் 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 48.2 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 263 ரன்களை எடுத்து, நெதர்லாந்து அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
லியோ படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்
இலங்கை அணியில் அதிகபட்சமாக சமரவிக்ரமா 91 ரன்களையும், நிஸ்ஸன்கா 54 ரன்களையும், அசலன்கா 44 ரன்களையும் எடுத்தனர். நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக சைப்ரான்ட் 70 ரன்களையும், லோகன் வான் பீக் 59 ரன்களையும், கோலின் அக்கெர்மன் 29 ரன்களையும் எடுத்தனர்.