spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஉலகக்கோப்பைப் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்த முகமது ஷமி!

உலகக்கோப்பைப் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்த முகமது ஷமி!

-

- Advertisement -

 

உலகக்கோப்பைப் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்த முகமது ஷமி!
Photo: ICC

ஒருநாள் உலகக்கோப்பைப் போட்டி ஒன்றில், 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை முகமது ஷமி பெற்றுள்ளார்.

we-r-hiring

“மருத்துவக் கல்லூரி புதிய விதி நீக்கம்”- அன்புமணி ராமதாஸ் வரவேற்பு!

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது அரையிறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். உலகக்கோப்பைப் போட்டித் தொடரில், 50 விக்கெட்டுக்களை வெகு விரைவாக வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் ஷமி வசம் வந்தடைந்தது.

17 இன்னிங்ஸ்களில் முகமது ஷமி 50 விக்கெட்டுகள் என்ற இலக்குகளை அடைந்துள்ளார். முன்னதாக, ஆஸ்திரேலியா அணியின் வீரர் மிட்செல் ஸ்டாக் 19 இன்னிங்ஸில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

நடப்பு உலகக்கோப்பைத் தொடரில், முதல் நான்கு போட்டிகளில் சேர்க்கப்படாத முகமது ஷமி, அதற்கு அடுத்த ஆறு போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் மூன்று முறை ஆட்டநாயகன் விருதினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

10, 11, 12- ம் பொதுத்தேர்வு, செய்முறைத் தேர்வு தேதி அட்டவணை வெளியீடு!

முதல் நான்கு போட்டிகளில் களம் காணாத ஷமி, வாய்ப்பு கிடைத்த போது, சிங்கம் என சீறி இந்தியாவின் வெற்றிக்கு உதவியதோடு, பல்வேறு சாதனைகளையும் தனத்தாக்கியுள்ளார்.

MUST READ