Homeசெய்திகள்விளையாட்டுநெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் சாதனை நிகழ்த்திய இந்திய அணி!

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் சாதனை நிகழ்த்திய இந்திய அணி!

-

- Advertisement -

 

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் சாதனை நிகழ்த்திய இந்திய அணி!
File Photo

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, இந்திய அணி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது.

பட்டாசு வெடித்த சிறுவர்கள் : பற்றி எரிந்த குடிசை.. சிதம்பரம் அருகே பரபரப்பு..

நடப்பு உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை கே.எல்.ராகுல் நிகழ்த்தியுள்ளார். கே.எல்.ராகுல் 62 பந்துகளில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 102 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளார்.

உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள் 5 சதம் விளாசி புதிய சாதனை படைத்துள்ளனர். நடப்பாண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் 2,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்தார்.

தீபாவளி வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.!

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், 24 சிக்ஸர்கள் விளாசி, அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையைப் படைத்ததுடன், சர்வதேச போட்டிகளில் தொடக்க வீரராகக் களமிறங்கி, 14,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையைப் பதிவுச் செய்தார் கேப்டன் ரோஹித் சர்மா.

MUST READ