பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து ஓட்டுவதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் தனியார் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கி சோதனை செய்துள்ளது.
முதல்கட்டமாக விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை , திருச்சி , வேலூர் , ஆகிய நகரங்களுக்கு வார இறுதிநாட்கள் , ஆயுத பூஜை பண்டிகை நாட்களை முன்னிட்டு இயக்கப்படுகிறது.
தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் அதிக அளவில் பொதுமக்கள் அரசு பேருந்துகளை நாடி வருவதால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் தேவைக்கேற்ப எடுத்து இயக்குவதாக போக்குவரத்து துறை தரப்பில் இருந்து விளக்கம் அளித்துள்ளனர்.
தற்போது சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தீபாவளி பண்டிகையின் பொழுது தமிழக முழுவதும் இதுபோல ஒப்பந்த பேருந்துகளை பொதுமக்களின் வசதிக்காக அரசு இயக்க முடிவு செய்துள்ளது.