நீலகிரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரசுப்பேருந்து ஓட்டுநரின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கோவில்மட்டம் என்ற இடத்தில் இன்று அரசுப் பேருந்தின் மீது உயர் மின்அழுத்த கம்பி உரசி விபத்து ஏற்பட்டது. இதில் மின்சாரம் தாக்கி அரசுப் பேருந்து ஓட்டுநர் பிரதாப் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை கேட்டு வருத்தமும் வேதனையும் அடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், அரசுப் பேருந்து ஓட்டுநர் பிரதாப்பை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், பிரதாப் குடும்பத்தினருக்கு ரூ.3 இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.