Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் வீட்டில் 8 மணிநேரம் நடந்த சிபிஐ சோதனை நிறைவு

முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் வீட்டில் 8 மணிநேரம் நடந்த சிபிஐ சோதனை நிறைவு

-

சென்னை பாலவாக்கத்தில் உள்ள சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் வீட்டில் 8 மணி நேரமாக நடைபெற்ற சிபிஐ அதிகாரிகள் சோதனை நிறைவு பெற்றது.

தமிழ்நாடு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக பொன்மாணிக்க வேல் பொறுப்பு வகித்தபோது, சர்வதேசக் கடத்தல் கும்பலோடு கூட்டுச் சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக, சிலைக்கடத்தல் பிரிவு டிஎஸ்பியாக இருந்த காதர்பாஷா பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!
File Photo

தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவுசெய்த ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஎஸ்பி காதர்பாட்ஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முன்னாள் ஐஜி, பொன் மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக சென்னை பாலவாக்கத்தில் உள்ள பொன்மாணிக்க வேல் வீட்டில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். சோதனையின்போது பொன்மாணிக்க வேலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்கு பின்னர் சிபிஐ அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

MUST READ