spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஜி.டி நாயுடு…ஜாதி அடையாளம் அல்ல, விஞ்ஞானத்திற்கும், ஆற்றலுக்கும் அடையாளம் -  கவிப்பேரரசு வைரமுத்து

ஜி.டி நாயுடு…ஜாதி அடையாளம் அல்ல, விஞ்ஞானத்திற்கும், ஆற்றலுக்கும் அடையாளம் –  கவிப்பேரரசு வைரமுத்து

-

- Advertisement -

ஜி.டி நாயுடு என்று பாலத்திற்கு பெயர் வைத்ததை ஜாதியின் அடையாளமாக கருதாமல் அவரின் விஞ்ஞானத்திற்கும், ஆற்றலுக்கும் அடையாளமாக தமிழ்நாடு கருதிக் கொள்ள வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.ஜி.டி நாயுடு…ஜாதி அடையாளம் அல்ல, விஞ்ஞானத்திற்கும், ஆற்றலுக்கும் அடையாளம் -  கவிப்பேரரசு வைரமுத்துசென்னை அண்ணா சாலை உள்ள நந்தனத்தில் தேவரின் சிலைக்கு அவரது 118 வது பிறந்தநாளை முன்னிட்டு கவிப்பேரரசு வைரமுத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியிருப்பதாவது, ”ஒரு தலைவனின் புகழ் காலமாக ஆக ஆக குறையும் அல்லது மறையும் என்றுதான் பல பேர் நினைக்கிறார்கள். காலம் தோறும் தேவரின் திருப்புகழ் வளர்ந்து கொண்டே வருகிறது. இதைத்தான் காலம் காட்டுகிறது. தேவர் என்பது ஜாதியின் அடையாளம் என்று யாரும் தனித்து பார்க்க வேண்டியதில்லை.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஜாதியின் பெயர் பழங்கால பெரியவர்கள் உடன் ஒட்டி வந்துள்ளது. ஜிடி நாயுடு என்றால் நாயுடு என்பது ஜாதி பெயராக அறியக் கூடாது. உ.வே.சாமிநாத ஐயர் என்றால் ஐயர் என்பது ஜாதி பெயராக பார்க்க கூடாது. வ. உ.சிதம்பரம் பிள்ளை என்றால் பிள்ளை என்ற பெயரை ஜாதி பெருமையாக கருதி விடக்கூடாது. அவைகள் எல்லாம் குறியீடுகள் மற்றும் ஆகு பெயர்கள். அந்தந்த காலத்தின் அடையாளங்கள் அவை.

we-r-hiring

ஜாதிக்கு முன் ஜாதிக்குப்பின் என்று வரலாற்றை இரண்டாக பார்க்க வேண்டும். ஜாதிப் பெயர்கள் அவர்களுடைய பெயரோடு ஒட்டிக் கொண்டிருப்பதால் அதை ஜாதியின் பெருமிதம் என்று யாரும் கருதி விடக்கூடாது. ஒரு ஜாதிக்கு உரியவராக யாரும் பிரித்து விடக்கூடாது. அவர்களின் பெயரோடு ஒட்டி இருக்கும் ஜாதி பெயரை அகற்றுவதற்கு நமக்கு உரிமை இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. வைரமுத்து என்ற என்னுடைய பெயரோடு ஜாதி பெயரை நான் இட்டுக் கொள்ள மாட்டேன். ஆனால் என்னுடைய பாட்டன் என்னுடைய தந்தை ஜாதி பெயர் இல்லாமல் அறியப்பட மாட்டார்.

நான் ஜாதி பெயரை இட்டுக் கொள்ளாமல் இருப்பது எனது வரலாறு. அவர்கள் ஜாதி பயிரோடு அறியப்பட்டது தான் அவர்களின் வரலாறு. ஜி.டி நாயுடு என்று பாலத்திற்கு பெயர் வைத்ததை ஜாதியின் அடையாளமாக கருதாமல் அவரின் விஞ்ஞானத்திற்கும், ஆற்றலுக்கும் அடையாளமாக தமிழ்நாடு கருதிக் கொள்ள வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால், சிகிச்சையின்றி பாம்பு கடித்தவர் பலி – அன்புமணி

MUST READ