spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.12 லட்சம் வரை உதவி – ரவிக்குமார் எம்.பி. தகவல்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.12 லட்சம் வரை உதவி – ரவிக்குமார் எம்.பி. தகவல்

-

- Advertisement -

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை கிராமப்புற பெண்கள், மாணவர்கள் அறிய திண்டிவனத்தில் 3 நாள் விழிப்புணர்வு முகாம் துவங்கியது. அதில், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்கு பிரதமரின் நிதியில் இருந்து ரூ. 3 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை உதவி கிடைக்கப்பெறுகிறது என எம்.பி. துரை ரவிக்குமார் தெரிவித்துள்ளாா்.கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.12 லட்சம் வரை உதவி – ரவிக்குமார் எம்.பி. தகவல்

திண்டிவனம் வந்தவாசி சாலை சந்தை மேட்டில் அமைந்துள்ள எஸ்.பி.ஜி திருமண மண்டபத்தில், மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைப் பற்றிய மூன்று நாள் விழிப்புணர்வு முகாம் இன்று துவங்கியது.

we-r-hiring

இந்த முகாம், இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பாக நடத்தப்படுகிறது. இதில் தூய்மை பாரதம், போஷண் அபியான், சர்வதேச பெண் குழந்தைகள் தினம், தேசிய ஒருமைப்பாட்டு தினம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

துவக்க விழாவில், விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, மத்திய அரசின் 35க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கான பதாகைகளை பார்வையிட்டு அதன் விளக்கங்களை கேட்டறிந்தார்.கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.12 லட்சம் வரை உதவி – ரவிக்குமார் எம்.பி. தகவல்இதனை தொடர்ந்து, கல்லூரி மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பேசுகையில், உலக அளவிலே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இதனால் ஏற்படும் இறப்பு விகிதத்தில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. இதற்கான சிகிச்சை பெற பிரதமரின் நிதியில் இருந்து ரூ. 3 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை உதவி கிடைக்கிறது.  இதுவரை கிட்டத்தட்ட 175 பேருக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

மேலும், விழுப்புரம் மாவட்டம் கல்வி, தொழில் குறிப்பாக பெண் கல்வியிலே பின் தங்கியுள்ளது.  விழுப்புரம் மாவட்டத்தில் 60% பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

அரசினுடைய திட்டங்களை பெற்றுக்கொள்ள பெண்களுக்கு கல்வி அறிவு மிகவும் அவசியம். விழிப்புணர்வு பெற்றால்  தான் சுகாதாரம் மேம்படும் மற்றும்  நோயிலிருந்து விடுபட்டு இறப்பை தவிர்க்கலாம் என்று கூறினாா்.கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.12 லட்சம் வரை உதவி – ரவிக்குமார் எம்.பி. தகவல்

இதற்கு முன் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பக இயக்குனர் காமராஜ் உறையாற்றுகையில், செல்வமகள் சேமிப்பு உள்ளிட்ட மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நல திட்டங்களை எடுத்துரைத்தார். இந்தியாவில் 50 கோடி வங்கிக் கணக்குகள் ஜந்தன் திட்டத்தின் கீழ் துவக்கப்பட்டுள்ளது. அடல் பென்ஷன் திட்டம்,பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் குறித்து கிராமப்புற பெண்கள், மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியல் மத்திய மக்கள் தொடர்பக உதவி இயக்குனர் பால நாகேந்திரன், திண்டிவனம் சார் ஆட்சியர் ஆகாஷ் , புதுச்சேரி கள விளம்பர உதவி அலுவலர் வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், கல்லூரி மாணவ மாணவிகள்,பொதுமக்களும் பங்கேற்றனர்.கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.12 லட்சம் வரை உதவி – ரவிக்குமார் எம்.பி. தகவல்

முகாமில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த 35  விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மாவட்ட சமூக நல அலுவலகம், அஞ்சல் துறை, காசநோய் பிரிவு மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பாக கண்காட்சி ஸ்டால்கள் அமைக்கப் பட்டு இருந்தன. அஞ்சல் துறை சார்பாக ஆதார் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முன்னதாக திட்டங்களை விளக்கி பறை இசைக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கண்காட்சி நாளை மறுநாள் வரை நடைபெறும் என்றும், இந்த முகாமில் கலந்து கொண்டு மக்கள் பயன்பெறுமாறு  சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பாக கேட்டுக் கொண்டுள்ளது.

“ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எனது கனவு“ – தடகள வீராங்கனை எட்வினா ஜேசன்

MUST READ